இந்துக்கள் ஒன்றுபட வேண்டும்

மூலம்: பிரான்ஸ்வா கொத்தியே (FRANÇOIS GAUTIER)

தமிழில்: ல. ரோகிணி


sri-sri-ravi-shankar
லட்சக்கணக்கானோர் அவரை பூஜிக்கின்றனர். பயங்கரவாதிகள் அவருடைய காலடியில் தங்களுடைய ஆயுதங்களைக் கீழே போட்டுள்ளனர். அவர் ஒரே ஒரு வார்த்தை கூட கோபமாகப் பேசி யாருமே, எப்போதுமே பார்த்ததில்லை. உண்மையும், அன்பும் அவருடைய வாழ்க்கையின் மாறாத லட்சியங்களாக இருந்து வருகின்றன. இருந்தும் 30-05-2010 ஞாயிற்றுக்கிழமை பெங்களூரில் நடந்த துப்பாக்கிச் சூடு நிகழ்வுக்குப் பிறகு, பெரும்பாலான ஊடகங்கள்
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களை இழிவுபடுத்தி வருகின்றன. கிட்டத்தட்ட அவர் பொய் சொல்வது போல் ஊடகங்கள் குற்றம் சாட்டுகின்றன. உண்மை என்னவென்றால் இன்றுள்ள சூழ்நிலையில் ஹிந்து குருமார்கள், ஆச்சார்யார்களுக்கு எதிராக புழுதிவாரி துற்றிக் கொண்டுள்ளனர். அவர்களுக்கு எதிராக திட்டமிட்ட சதி நடந்து கொண்டுள்ளது.
 இன்று ஊடகங்களும் அரசும் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களை அவருடைய சீடர்களின் கண்ணோட்டத்திலும், பொதுவாக இந்தியர்கள் மத்தியிலும் இழிவுபடுத்த முயற்சிக்கின்றனர். அடுத்தது யரோ?
இன்றைய காலகட்டத்தில் ஹிந்துக்கள் மீது இந்த அளவுக்கு தாக்குதல்கள் நடத்தப்படுவது ஏன் என்பதை ஆராய வேண்டும். முதலாவதாக ‘கர்மா’ வைத்தான் சொல்லவேண்டும். ஹிந்துக்கள் பலமுறை ஒருவரை ஒருவர் காட்டிக்கொடுத்துள்ளனர். அவர்கள் அசிரத்தை கொண்டவர்களாக, விழிப்பற்றவர்களாக, சில சமயங்களில் அகந்தை கொண்டவர்களாக ஆகிவிட்டனர். இரண்டாவதாக இன்று பல கூட்டுச் சக்திகள் தெரிந்தோ, தெரியாமலோ, அறிந்தோ, அறியாமலோ, வெளிப்படையாகவோ அல்லது மறைமுகமாகவோ ஹிந்து தர்மத்தைத் தாக்கி வருகின்றன.

முதலாவதாக

இந்த நாட்டின் ‘இயக்கு சக்தியாக’ இன்றியமையாத தலைவராக உள்ள நபர் ஒரு கிறிஸ்தவர்! (சோனியா என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை) கிறிஸ்துவ ஆதிக்கம் உள்ள எந்த ஒரு நாட்டிலும், உதாரணமாக ஃபிரான்ஸ் போன்ற ஒரு நாட்டில் ‘ஒரு ஹிந்து’ இவ்வாறு திரைக்குப் பின்னால் இருந்து கொண்டு எல்லோரையும் எல்லாவற்றையும் இயக்கமுடியுமா?

இரண்டாவதாக,

 இந்தியாவின் இன்றைய தலைவர்களில் பலர் மார்க்சிஸ்ட் மனப்பான்மை கொண்டவர்களாக உள்ளனர். மதம் காலாவதியான ஒன்று. இறுதியில் அதைக் கைகழுவிவிடவேண்டும் என்று அவர்கள் நினைக்கின்றனர். (ஆனால் ஒன்றை நீங்கள் கவனிக்கவேண்டும். அவர்கள் கிறிஸ்தவ மதத்தையோ, இஸ்லாமையோ தொடமாட்டார்கள்). இதன் காரணமாகத்தான் ‘யோக நாடான பாரதத்தில்’ ஆன்மிக மற்றும் யோக ஸ்தாபனங்களைத் தாக்குகிறார்கள்.

மூன்றாவதாக,

 இப்போது கிறிஸ்தவ மதத்திற்கு மதமாற்றங்கள் செய்வது, முன் எப்போதையும் விட மிக அதிகமாக நடக்கிறது. இத்தகைய மதமாற்றங்கள் இப்போது நடைபெறும் வீச்சு போல், என்றுமே இருந்ததில்லை. பிரிட்டிஷார் காலத்தில் கூட, கிறிஸ்தவ மதத்திற்கு, இந்த அளவுக்கு மதமாற்றங்கள் நிகழவில்லை. மூன்று சதவீத இந்தியர்கள் மட்டுமே கிறிஸ்தவர்கள் என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. ஆனால், ‘புது சென்ஸஸ்’ விஷயங்களைப் பார்த்தால், நீங்கள் ஆச்சரியப்பட்டுப் போவீர்கள். சுனாமி வந்த பிறகு தமிழகக் கடற்கரைப் பகுதியில் 12% இந்தியர்கள் கிறிஸ்தவத்திற்கு மதமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதற்காக ஏமாந்த, விவரம் தெரியாத, மேற்கத்திய மக்கள் கொடுத்த லட்சக்கணக்கான டாலர்களின் துணையோடு, இந்த மதமாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. வளைகுடா நாடுகளில் இந்திய முஸ்லிம்கள் வேலை செய்கின்றனர். அவர்கள் திரும்பி வரும்போது ஒரு தீவிரவகை இஸ்லாமை இந்தியாவுக்குத் தங்களுடன் கொண்டு வந்துள்ளனர். ஹிந்து விரோத வன்முறை, பயங்கரவாதத் தாக்குதல்கள் நடைபெற இந்தச் சூழ்நிலை உதவியாக உள்ளது. இந்தியாவில் உள்ள உள்ளூர் முஸ்லிம்களின் உதவியும் ஆதரவும் இல்லாமல் பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் செயல்படவே இயலாது.

இறுதியாக,

 தொலைக்காட்சிகள் மற்றும் விளம்பரங்கள் மூலம் ‘மேற்கத்திய மயமாதல்’இந்தியாவில் புயலடிக்கும் வேகத்தில் பரவிக் கொண்டுள்ளது. இதுவே மிகப்பெரிய அபாயமாக இருக்கக்கூடும். ஏனென்றால் பல ஆசிய நாடுகளின் ஆத்மாக்களை மேற்கத்திய தாக்கம் கொன்றுள்ளது.
கிறிஸ்தவர்களுக்கு போப் உள்ளார். முஸ்லிம்களுக்கு குரானின் கட்டளை உள்ளது. கம்யூனிஸ்டுகளுக்கு காரல் மார்க்சின் ‘தாஸ் கேபிடல்’ புத்தகம் உள்ளது. ஆனால், ஹிந்துக்கள் முற்றிலுமாக பிளவுபட்டுக்கிடக்கின்றனர். இந்தக் காலகட்டத்தில் எவ்வளவு அதிகமாக பணம் சம்பாதித்துக் குவிக்க முடியுமோ அதில் ஹிந்துக்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மேற்கத்திய வாழ்க்கை முறையைக் காப்பியடித்து வாழ்ந்து வருகின்றனர். தங்களுடைய குழந்தைகளுக்கு ஹிந்து கலாசாரம், ஹிந்து நெறிமுறைகளையும் ஹிந்துக்கள் சொல்லித் தருவதில்லை. மாறாக ஒவ்வொரு முஸ்லிம் குழந்தைக்கும் ‘குரான்’ கற்பிக்கப்படுகிறது. அமெரிக்காவிலோ, இங்கிலாந்திலோ உள்ள ஹிந்துக் குழுக்கள், இடைவிடாது, தங்களுக்குள் சண்டை இட்டுக்கொண்டு உள்ளன. இதன் விளைவாக ‘பேரம் பேசும் சக்தி’ அவர்களிடம் மிகவும் குறைவாக உள்ளது.
இந்திய முஸ்லிம்கள் அல்லது இந்திய கிறிஸ்தவர்களிடம் இதற்கு நேர்மாறான நிலை உள்ளது. நரேந்திர மோடி போன்ற ஒரு மாநில முதல்-அமைச்சருக்கே ‘விசா‘ கிடைக்காமல் செய்ய இந்திய கிறிஸ்தவர்களால் முடிகிறது. இத்தனைக்கும் நரேந்திர மோடியின் குஜராத் அரசு அதிகமான திறமையோடு, ஊழல் இன்றி செயல்பட்டு வருகிறது.
எனவே, ஹிந்து குருமார்களும் சுவாமிகளும் ஆச்சார்யர்களும் ஒரு குடையின்கீழ் அணிதிரள வேண்டியது மிகவும் முக்கியமான ஒன்றாகும். அந்த அமைப்பை, ‘தலைமை ஹிந்து கவுன்சில்’என்று அழைக்கலாம். ஒவ்வொரு ஹிந்துக் குழுவும், குருவும், தங்களுடைய தலைமையை, சுயேச்சைத் தன்மையைத் தொடரலாம். ஆனால், இவர்கள் அனைவரும் வருடத்திற்கு மூன்று முறை கூடவேண்டும். பலவிதமான கட்டளைகளை நெறிமுறைகளை இவர்கள் வெளியிட வேண்டும். இந்தியாவில் உள்ள 80 கோடி ஹிந்துக்கள், உலக அளவில் சேர்த்து 100 கோடி ஹிந்துக்களும் இந்தக் கட்டளைகளுக்குச் செவிசாய்க்க வேண்டும்.
இந்தியா முழுவதிலும் ஏராளமான ஹிந்து குருமார்களும், சுவாமிகளும் உள்ளனர் அவர்கள் அனைவரையும், ஒரே குழுவாக ஓரிடத்தில் ஒன்று சேர்ப்பது என்பது நடக்காத காரியம். இந்தியாவில் 12 மிக முக்கியமான ஹிந்து குருமார்கள் உள்ளனர். பெரும்பாலான சீடர்களை அவர்கள் கொண்டுள்ளனர். பிற எல்லா சுவாமிகள், குருமார்களை அவர்கள் பிரதிநித்த்துவப் படுத்துகின்றனர். எனவே அவர்களைக் கொண்டு இந்தத் தலைமை ஹிந்து கவுன்சிலை அமைக்கவேண்டும் என்று ஒரு யோசனையை முன்வைக்கிறேன்.
முதல்கட்டமாக, அந்தக் குழுவில் ஸ்ரீ சத்ய சாய்பாபா, ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், அமிர்தானந்தமயி, காஞ்சி சங்கராச்சாரியார், கணேஷ்புரி குரு, ஸ்ரீ ராம்தேவ், சத்குரு ஜக்கிவாசுதேவ் முதலியோர் இடம் பெற்றிருக்க வேண்டும்.
ஒவ்வொரு வருடமும் சுழற்சி முறையில் மாற்றியமைக்கப்பட வேண்டும். உறுப்பினர்களும், அதேமாதிரி மாற்றப்பட வேண்டும். ஏனென்றால் இந்தியாவில் இன்னும் பற்பல பெரிய குருமார்களும், அவர்களது பெரிய அடியார்கள் கூட்டங்களும் உள்ளன.
aum_om_ohm‘ஹிந்து தர்மம்’ மட்டும் பேராபத்தில் சிக்கி இருக்கவில்லை. பல யுகங்களாக இந்தியாவுக்குக் கிடைத்த எல்லையற்ற ஞானமும் கூட இன்று பேராபத்திற்கு உள்ளாகியுள்ளது. ஒரு குறிப்பிட்ட வடிவத்தில் இந்தியாவில் மட்டுமே இந்த ஞானம் தப்பிப் பிழைப்பது எஞ்சியுள்ளது. இந்த ஞானம் மட்டுமே உலகைக் காக்கவல்லது. தங்களிடம்‘தேவையான எண்ணிக்கை’ உள்ளது என்பதை ஹிந்துக்கள் புரிந்துகொள்ள வேண்டும். உலகில் ஹிந்துக்கள் மிகவும் வெற்றிகரமான, சட்டத்தை மதித்து நடக்கும் சக்திவாய்ந்த சமூகமாக விளங்குகின்றனர். அவர்களது குருமார்களை யாரும் கேவலப்படுத்தக்கூடாது.
நன்றி: விஜயபாரதம் 09-07-2010 இதழ்.
francois_gautier
பிரபலபத்திரிகையாளர் பிரான்ஸ்வா கொத்தியே 1959-ல் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் பிறந்தார். தனது 19-வது வயதில் இந்தியா வந்த அவர் ஸ்ரீஅரவிந்த ஆசிரமத்தில் பல ஆண்டுகள் இந்து தர்ம தத்துவங்களையும், இந்து வாழ்க்கை முறையையும், கலாசாரத்தையும் பயின்றார். பின்னர் இந்தியாவிலேயே நிரந்தரமாகத் தங்கி விட்டார். இந்தியப் பெண் நம்ரதாவை மணம் புரிந்தார். இந்துத்துவம், இந்து அரசியல், சமூக பிரசினைகள் ஆகியவை பற்றி உறுதியான பார்வையுடன் தொடர்ந்து பேசியும்,எழுதியும் வருபவர் கொத்தியே. ரிடீஃப்.காம், இந்தியன் எக்ஸ்பிரஸ், அவுட்லுக், தி சண்டே இந்தியன் ஆகிய இதழ்களில் இவரது பத்திகள் வெளியாகி வருகின்றன. இந்திய வரலாறு, இந்து குருமார்கள் ஆகிய விஷயங்களைப் பற்றி ஆறு புத்தகங்கள் எழுதியுள்ளார்………..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s