ஜிஹாது.

போலி ஜிஹாதியம் – ஊடகத்தின் ஊன பார்வை…

                                          ஓரிறையின் நற்பெயரால்

இது ஒரு காமெடியாக எழுதப்பட்ட சீரியஸ் விசயங்க….

ஜிஹாதுன்னா..? 


  பொதுமக்களையும்,அப்பாவிகளையும் கொல்றதுக்கு பேருதாங்க ஜிஹாது….. இது உலக வலை விற்பனர்கள் முதல் உள்ளூர் ஊறுகாய் வியாபாரி வரைக்கும் அறியாமலே அறிந்ததாய் சொல்லும் ஒரு வாக்கியம்…. இந்த அடிப்படை தவறான வாக்கியத்திற்கு அடிப்படையில் இரண்டு காரணம்.,

  • இஸ்லாமியர்கள் ஊடகத்தை சரிவர பயன்படுத்தி கொள்ளவில்லை.,
  • ஊடகம் இஸ்லாமியர்களை தவறாக பயன்படுத்தி கொண்டிருக்கின்றது- அதிலும் குறிப்பாக சினிமாத்துறை மிக மோசமாக இஸ்லாமிய எதிர்ப்பை அரங்கேற்றிக்கொண்டிருக்கிறது., அத்தகைய சினிமாவில் இஸ்லாம் நிலை குறித்தே இங்கு பதிவு.

சின்ன ப்ளாஸ்பேக்


ப்ளாக் & ஒயிட் சினிமாக்களில் இஸ்லாமியர்

“அரே பாய் சைத்தான் நிம்மளிக்கி ப்லிம் காட்ரான்… “
என்று உண்மை இஸ்லாமியர்களுக்கு கூட (பேச) தெரியாத மொழியில் நீள்வட்ட தொப்பியுடன், கொஞ்சம் குறுந்தாடி கறைபடிந்த பற்கள் நீண்ட ஜிப்பா சகிதமாக கையில் குச்சியுடன் வட்டியை வசூல் பண்ணும் காட்சியில் தோன்றுவார்… அதுதான் அன்றைய இஸ்லாமியர் அறிமுகம்.,

இடைப்பட்ட காலங்களில் ஒரு படி மேல போய்…. வீடுகள் முழுக்க காபா படங்கள்., பாங்கு சொல்லும் போதே.. தொழுது கொண்டிருப்பார் ., எப்போதும் தலையில் வலைத்தொப்பியுடன் , கழுத்தில் தட்டை வடிவ தாயத்து அதில் முன்புறம் வளர்பிறை அதன் மேலாக 786 என பொறிக்கப்பட்டிருக்கும் ( பார்த்தீர்களா இஸ்லாத்தை எவ்வளவு ஆழமாக உணர்ந்து எடுத்திருக்கிறார்கள்)
பெரும்பாலும் சோக செய்திகள் இவரிடம் சொல்லப்படும் போது “யா அல்லா…”(ஹ்)… என உச்சஸ்த்தாயில் கத்தி பெருமூச்சுடன் முடிப்பார்.. ப்ளாஷ் பேக் ஓவர்

நிகழ்கால சினிமாக்களில் இஸ்லாம்


இந்த ஆக்கத்தின் மையக்கருவே இது தான்., சில தினங்களுக்கு முன்பு தொலைக்காட்சியில் நான் பார்த்த ஒரு காட்சி


காட்சி -1

ஒரு நல்ல முஸ்லிம், தீவிரவாதியாக கருதப்பட்டு அடித்து செல்லப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். அப்போது அங்கு குர்-ஆன் சகிதமாக நெற்றியில் தொழுதற்கான அடையாள தழும்புகளுடன், கண்டிப்பாக தாடியுடன் இருக்கும் கெட்டமுஸ்லிம் தீவிரவாதி சொல்கிறார்
“இந்த நாட்டில் இவ்வளவு நமக்குதான் மரியாதை…..
நல்ல முஸ்லிம் மிரட்சியுடன் பார்க்கிறார்…

மேலும் சில நிமிடங்கள் கழித்து
காட்சி -2

நாட்புறமும் குண்டுகள் சத்தம் முழங்க ஏந்திய துப்பாக்கியுடன் சக முஸ்லிம் தீவிரவாதிகள் அங்கு வருகின்றனர்
நல்ல முஸ்லிம் கேட்கிறார் என்ன…… செய்ய போறீங்க……
கெட்ட முஸ்லிம்  தீவிரவாதி தன் உடம்பில் “பாம்” கட்டிக்கொண்டே கூலாக சொல்கிறார்
இந்த நாட்டிற்கு நாம யாருன்னு காட்ட போறோம்….

காட்சி – 3

மருத்துவ மனை வளாகத்தில் தென்படுவோரை சுட்டுக்கொண்ட முன்னேற
நல்ல முஸ்லிம் ஹீரோவுடன் இணைந்து ஏனையோரை காப்பாற்ற முற்பட…
எதிரில் கெட்ட முஸ்லிம்  தீவிரவாதியும் வர
ஹீரோ கேட்கிறார்
எந்த கடவுள்டா மக்களை கொல்ல சொன்னீச்சு….
கெட்ட முஸ்லிம்  தீவிரவாதி
ஜிஹாத்…… ஜிஹாத்….. தொடர்ந்து இந்தியில் ஏதோ….சொல்ல
மீண்டும் கேட்கிறார் ஹீரோ
கடவுளை விடுங்க.. மனுஷங்களே பாருங்கடா…
ஜிஹாத்…… ஜிஹாத் 
மீண்டும் அதே உச்சரிப்பு கெட்ட முஸ்லிம்  தீவிரவாதியிடமிருந்து மேலும் இந்தியில் ஏதோ… சொல்லிக்கொண்ட ஹீரோவை நெருங்க.. உடல் முழுவதும் பாம் வேறு… ஹீரோ கட்டிப்பிடித்தவாறே கட்டிடத்திலிருந்து குதிக்க வழக்கம் போல் கெட்ட முஸ்லிம்  தீவிரவாதி சாக வழக்கத்திற்கு மாறாக ஹீரோவும் சாகிறார்,
இந்த கேப்ல… நல்ல முஸ்லிம் உருக்கமாக பேசுகிறார் அதைக்கேட்டு ஒரு கெட்ட முஸ்லிம்  தீவிரவாதி சுப்பாக்கியால் தன்னைதானே சுட்டு சூஸைடு வேறு…

 இங்கு ஒரு விசயத்தை கண்டிப்பாக நாம் கவனிக்க வேண்டும் இஸ்லாத்திற்கு சம்பந்தமில்லாத செயல்களை வட்டிக்கு விடுதல், தகடு தாயத்து அணிதல் போன்றவற்றை செய்பவர்களை மீடியாவில் நல்ல முஸ்லிம்களாக காட்டப்படுகின்றனர். ஆனால் இஸ்லாம் செய்ய சொன்னதை செய்வர்களாக குர்-ஆன் ஓதுதல் தாடிவைத்தல் போன்றவற்றை அடிப்படையாக கொண்டவர்கள் மீடியாவில் தீவிரவாதிகளாக அறிமுகம்,,,

இந்த சினிமாத்துறை இஸ்லாத்தை பற்றியும் அறிந்திருக்கவில்லை., இஸ்லாமியர்களை பற்றியும் தெரிந்திருக்கவில்லை., ஆயுதபூஜைக்கு தனது பழைய TVS 50 க்கு புதிதாய் சந்தனமிடுபவர்களும், ஹோலி பண்டிகையில் எதையாவது போலியாய் எரிக்கும் முஸ்லிம்களுமே இவர்கள் பார்வையில் உண்மை முஸ்லிம்கள்.,

அட கேடுகெட்ட சினிமாத்துறையே…. இஸ்லாமியர்களை திருத்துவதாக சொல்லி இஸ்லாத்தில் இல்லாததை விமர்சிக்கிறாயே… உன் உலக அறிவை இஸ்லாமிய அறிவோடு பொருத்துவதை எப்படி மெச்சுவது..

ஜிஹாத்., -விளக்கம் கொடுத்து கொடுத்தே ஓய்து போனவர்கள் நம்மில் அனேகம்…
அல்லாஹ் குர்-ஆனில்

“நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்;. மேலும், எவரொருவர் ஓர் ஆத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்” (அல்குர்-ஆன். 5:32)


       நபிகள் நாயகம் (ஸல்) அவர்களோ 

எவரது நாவாலும், கரத்தாலும் ஏனையவர்களுக்கு தீங்கு ஏற்படவில்லையோ – அவரே உண்மை முஸ்லிம் ஆவார்

இவ்வாறு அல்லாஹ்வும் அவனது திருத்தூதரும் கூறியிருக்க இஸ்லாம் அங்கிகரிக்காத, அறுவெறுக்கும் ஒன்றை, தடைசெய்த, ஏற்க மறுத்த ஒன்றை, இஸ்லாத்தில் பெயரில் செய்வதாக திரிப்பது எவ்வளவு பெரிய கொடுமை.,

  • தனி மனித கொலையை., அங்கிகரிக்காத இஸ்லாம் எப்படி இறைவன் பெயரில் மக்களை கூட்டம் கூட்டமாக கொல்ல சொல்லும்., ?
  • தற்கொலை ஹராம்..( விலக்கப்பட்டது) அஃது தற்கொலை புரிவோருக்கு நரகம் என மார்க்கம் சொல்லும் போதும் தற்கொலை படை தாக்குதலை நடத்தவோரை சுவனப்பதியில் எப்படி இஸ்லாம் நுழைய செய்யும்..?

இவையெல்லாம் பார்க்கும்போது திரைத்துறை ஊடங்களுக்கு சரியான இஸ்லாமிய புரிதல் இல்லையென்பதை காட்டிலும் இஸ்லாம் குறித்த அடிப்படை அறிவுக்கூட இல்லை., என்பதே உண்மை.,

                                                                             அல்லாஹ் மிக்க அறிந்தவன்

நன்றி : நான் முஸ்லிம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s